சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் முத்தம் தரக்கூடாது, கட்டிப்பிடிக்கக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதி முதலாக கொரோனா பாதிப்புகள் பரவ தொடங்கிய நிலையில் தற்போது வரை பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். அவ்வபோது கொரோனா குறைந்தாலும் மீண்டும் புதிய அலைகள் தோன்றுவதால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் கடுமையான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அங்கு கடுமையான ஊரடங்கு கட்டுபாடுகளும் அமலில் உள்ளது.
இந்நிலையில் டிரோன்கள் மூலமாக கோவிட் குறித்த எச்சரிக்கைகளை சீனாவின் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஆண்களை விட்டு விலகி இருக்கும்படி சுகாதாரத்துறை ஊழியர்கள் பெண்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனோடு சேர்த்து கட்டிப்பிடிக்க கூடாது, முத்தம் தரக்கூடாது என கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.