2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பூமி முற்றிலும் அழிந்து நாசமாகும் என்று விஞ்ஞான எழுத்தாளர் டேவிட் மேட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டேவிட் மேட் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் எழுதியுள்ள பிளாணட் எக்ஸ் - தி 2017 அரைவல் ( Planet X – The 2017 Arrival ) என்ற புத்தகத்தில் சூரியனைப் போன்றதொரு கோளான நிபிரு (Nibiru) பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்றும் அந்த கோள் பூமியின் தென் துருவத்தில் வருகிற அக்டோபர் மாதம் மோதி பெரும் நாசத்தை விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோதல் காரணமாக பூமி தவிடுபொடியாகிவிடும் என்றும் அவர் அதிர்ச்சி அளிக்கும் தகவலை கூறியுள்ளார்.
தீக்கோளமான நிபிரு கோள் சூரியக் குடும்பத்தின் விளிம்பில் உள்ளது என்றும் அப்படி ஒரு கோள் இல்லை என்றும் விஞ்ஞானிகள் இருதரப்பு கருத்துக்களை கூறிவருகிறார்கள்.
ஆனால், டேவிட் மேட் பூமியை விட பலமடங்கு பெரிய கோளான நிபிரு பல ஆண்டுகளாக பூமியை நோக்கி பயணிக்கிறது என்றும் வருகிற அக்டோபர் மாதம் பூமியின் மீது அது மோதும் என்றும் சொல்கிறார்.
ஆனால், டேவிட்டின் இந்த கணிப்பை நாசா மறுத்துள்ளது. நிபிரு கோள் வெறும் கற்பனை என்று தெரிவித்துள்ளது.