Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர்ந்து நான்கு நிலநடுக்கங்கள்; சுனாமி எச்சரிக்கை! – நியூஸிலாந்தில் பரபரப்பு!

தொடர்ந்து நான்கு நிலநடுக்கங்கள்; சுனாமி எச்சரிக்கை! – நியூஸிலாந்தில் பரபரப்பு!
, வெள்ளி, 5 மார்ச் 2021 (10:34 IST)
நியூஸிலாந்தின் அருகேயுள்ள கடல் மட்டத்தில் தொடர்ந்து 4 நிலநடுக்கங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்தின் கடற்கரை பகுதியிலிருந்து 1000 கி.மீ தூரத்தில் கடல் மட்டத்தில் 8.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உருவானதை தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் கண்டறிந்துள்ளது. அதை தொடர்ந்து 6.2 மற்றும் அதற்கு குறைவான அளவுகளில் பல்வேறு கடல் மட்டங்களில் நிலநடுக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் நியூஸிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் உணரப்படாவிட்டாலும் மக்கள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக கடற்கரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அமெரிக்காவில் பிறப்புவிகிதம் வீழ்ச்சி