Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

27 நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

27 நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Siva

, வியாழன், 19 செப்டம்பர் 2024 (07:38 IST)
புதிய எக்ஸ்இசி வகை கொரோனா, 27 நாடுகளில் பரவி வருகிறது என்றும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த கொரோனா வகை, முன்பு பரவிய ஒமிக்ரான் திரிபுகள் KS.1.1 மற்றும் KP.3.3 ஆகியவற்றின் கலவையாகும். இந்த புதிய திரிபு விரைவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய கொரோனா திரிபாக மாறும் என்ற எச்சரிக்கையை விஞ்ஞானிகள் விடுத்துள்ளனர்.

இந்த எக்ஸ்இசி வகை முதன்முதலில் ஜெர்மனியில் கடந்த ஜூன் மாதம் கண்டறியப்பட்டது. அதன் பின்னர், இங்கிலாந்து, அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் பரவத் தொடங்கியது. நிபுணர்கள் கூறுவதின்படி, இந்த ஒமிக்ரான் திரிபு வரும் குளிர்காலத்தில் வேகமாக பரவலாம், ஆனால் தடுப்பூசிகள் மூலம் இதை கட்டுப்படுத்த முடியும்.

இதுவரை 27 நாடுகளில், உள்பட போலந்து, நார்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுக்கல், சீனா ஆகியவற்றில் 500 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் எக்ஸ்இசி வகை புதிய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, லண்டன் பல்கலைக்கழக மரபியல் மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ஃபிரான்சாயிஸ் பாலக்ஸ் தெரிவித்ததாவது, "எக்ஸ்இசி எனப்படும் இந்த புதிய வகை கொரோனா வேகமாக பரவக்கூடியது. இருப்பினும், இதை தடுப்பூசிகள் மூலம் தடுக்க முடியும்," என்றார்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக கழன்று ஓடிய 3 பெட்டிகள்: பயணிகள் அதிர்ச்சி;