இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்.. ஆனால் தாக்கியது ஈரான் அல்ல.. இன்னொரு நாடு. அதிர்ச்சி தகவல்..!

Mahendran
சனி, 28 ஜூன் 2025 (14:51 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், இந்த முறை தாக்கியது ஈரான் அல்ல; ஏமன் என்று செய்திகள் வெளியாகி, மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காசாவுக்கு ஆதரவு தரும் ஏமன் தற்போது திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது ஏமன் செலுத்திய ஏவுகணைகளையும் டிரோன்களையும் இடைமறித்து இஸ்ரேல் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது. 
 
ஏற்கனவே இஸ்ரேல்-ஈரான் போரின்போது, ஈரானுக்கு ஆதரவு தெரிவித்திருந்த ஏமன், செங்கடல் வழியாக செல்லும் அமெரிக்க சரக்கு மற்றும் போர்க்கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் வெளியாகின. 
 
இப்போது திடீரென இஸ்ரேல் மீது ஏமன் நாடு தாக்குதல் நடத்தியது, மத்திய கிழக்கு பகுதிகளில் மீண்டும் போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments