Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை5ல் உலகம் அழியப்போகிறதா? .. பெண் சாமியார் கணிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி.!

Siva
புதன், 18 ஜூன் 2025 (09:15 IST)
வரும் ஜூலை 5ஆம் தேதி ஜப்பானில் மிகப்பெரிய அழிவு ஏற்படும் என பெண் சாமியார் பாபா வங்கா என்பவர் கணித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த சாமியார் ஏற்கனவே 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி, இளவரசி டயானாவின் மரணம் மற்றும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஆகியவற்றை முன்கூட்டியே கணித்துக் கூறியதாக பரவலாக பேசப்படுகிறது.
 
இந்த நிலையில், இந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே உள்ள கடல் படுகையில் விரிசல் ஏற்படும் என்றும், இதன் காரணமாக மிகப்பெரிய அழிவு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
 
இவருடைய கணிப்பை நம்பி ஏராளமானோர் தங்களது விமான பயணங்களை ரத்து செய்து விட்டதாகவும், சில விமான நிறுவனங்கள் ஜூலை 5ஆம் தேதி சேவையை நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், கணிப்பு தேதி நெருங்கி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், ஜப்பான் நாட்டின் மியாகி மாகாண ஆளுநர் இது குறித்துக் கூறியபோது, "தயவுசெய்து வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். மக்கள் வதந்திகளைப் புறந்தள்ளி இயல்பாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும், ஜப்பானியப் பெண் சாமியார் வங்கா, 2030ஆம் ஆண்டு கொரோனா வைரஸின் புதிய வடிவம் ஏற்படும் என்றும், அப்போது மிகப்பெரிய அளவு பாதிப்பு ஏற்படும் என்றும் கணித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments