Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் மதகுரு இருக்கும் இடம் எங்களுக்கு தெரியும்.. ஆனால் கொல்லப்போவதில்லை: டிரம்ப்

Siva
புதன், 18 ஜூன் 2025 (09:00 IST)
ஈரான் மதகுரு ஒளிந்திருக்கும் இடம் தனக்கு தெரியும் என்றும், அவரை கண்டுபிடிப்பது என்பது ஒரு பெரிய இலக்கு அல்ல என்றும், ஆனால் இப்போதைக்கு அவரை கொல்லும் எண்ணம் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஈரான் மதகுரு அயதுல்லா அலி கமேனியை கொலை செய்தால் தான் இந்த பிரச்சனை தீரும் என்று இஸ்ரேல் அதிபர் கூறியிருந்தது பரபரப்பை கிளப்பியது. இதனை அடுத்து, அவரை கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரேல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், ஈரான் தலைமை மதகுரு கமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது அமெரிக்காவுக்கு தெரியும் என்றும், அவரை பிடிப்பதெல்லாம் ஒரு பெரிய இலக்கு அல்ல என்றும், ஆனால் இப்போதைக்கு நாங்கள் அவரைக் கொல்லப்போவதில்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். 
 
மேலும், ஈரான் மக்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும், ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அமெரிக்கா நேரடியாக போரில் தலையிட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார். 
 
ஆனால், டிரம்ப்பின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத ஈரான் தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments