இம்ரான்கானை கிண்டல் செய்த நெட்டிசன்கள்...

செவ்வாய், 6 நவம்பர் 2018 (13:36 IST)
சீன தேசத்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பாதுகாப்பு,பொருளாதாரம் சம்பந்தமான விஷயங்கள் பற்றி அந்நாட்டு பிரதமருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை பாகிஸ்தான் செய்தி சேனல் ஒன்று நேரடியாக ஒளிபரப்பியது. அப்போது பீஜிங்கில் இம்ரான்கான் என்பதற்கு பதிலாக பெக்கிங்கில்(begging)இம்ரான் கான் என தவறாக பதிவிட்டதால் நெட்டிசன்களின் பலமான கிண்டலுக்கு ஆளானது.
 
பின்னர் இந்த தவறு திருத்தபட்டது.
 
ஆனால் நெட்டிசன்கள் இதை விடுவதாக தெரியவில்லை.நாள்பூராவும் இது குறித்தேதான் விமர்சனம் செய்தபடி இருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பிறந்த சில நாட்களில் 12 குழந்தைகள் உயிரிழப்பு...