ஈராக் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில் மூன்றாம் உலக போர் மூளும் அபாயம் இருப்பதாக பலர் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமானநிலையம் 3 ராக்கெட் குண்டுகளால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 8 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த தாக்குதலை தொடுத்தவர்கள் யார் என தெரியாத நிலையில் அமெரிக்க இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ட்ரோன்கள் மூலம் ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இதை அமெரிக்கா செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி பலியானதாகவும் கூறப்படுகிறது. இவர்தான் ஈரானில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தத்க்கது. மேலும் ஈரான் மிலிட்டரி கமாண்டர் அபு மஹ்தி அல் முஹாண்டிஸும் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுவதால் அங்கு பதட்டம் அதிகரித்துள்ளது
இந்நிலையில் நெட்டிசன்கள் மூன்றாம் உலக போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ட்விட்டரில் World War 3 என்ற ஹேஷ்டேகை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் உலகளாவிய பதட்ட சூழல் எழுந்துள்ளது.