என்ன பண்ணியும் வருமானமே வரல..! – 150 பணியாளர்களை நீக்கிய நெட்பிளிக்ஸ்!

Webdunia
புதன், 18 மே 2022 (15:24 IST)
கடந்த சில காலமாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் சரிவை சந்தித்து வரும் நிலையில் 150 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

உலக அளவில் உள்ள ஓடிடி நிறுவனங்களில் முக்கியமான தளமாக நெட்பிளிக்ஸ் இருந்து வருகிறது. தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் என நெட்பிளிக்ஸூக்கு போட்டியாக பல ஓடிடி நிறுவனங்களும் உள்ள நிலையில் நெட்பிளிக்ஸ் தனது வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த தொடர்ந்து முயன்று வருகிறது.

மற்ற ஓடிடி தளங்களை போல நெட்பிளிக்ஸும் தனது மாத சந்தா, ஆண்டு சந்தாவை குறைத்தும், அதிகமான கண்டெண்டுகளை வழங்கியும் கூட தொடர்ந்து நெட்பிளிக்ஸின் வளர்ச்சி சரிவையே சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

நெட்பிளிக்ஸ் நிறுவனம் அனிமேஷன் தொடர்களுக்காகவே தனி ஸ்டுடியோவை நடத்தி வந்த நிலையில் அதில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் எதிர்கால அனிமேஷன் ப்ராஜெக்டுகள் பலவற்றை நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் பிரிட்டனை மையமாக கொண்டு இயங்கும் நெட்ப்ளிக்ஸில் வளர்ச்சி சரிவு காரணமாக 150 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments