Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள அதிபர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (22:15 IST)
நேபாள நாட்டில் பிரதமர் புஷ்பா கலம் தாஹல் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நாட்டில் அதிபர் ராம்சந்திர பவுதல் (71) சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி திடீர் வயிற்று வலிகாரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று மீண்டும் உடல் நலக்குறைவால் ராம்சந்திர பவுதல் பாதிக்கப்பட்ட  நிலையில், குடும்பத்தினர் அவரை தலைநகர் காத்மண்டுவில் உள்ள   டியூ மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.

எனவே, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று காலை அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு  அனுப்பிவைக்கப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியை அடக்கம் செய்யும் போது கணவர் மறைவு.. 55 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தம்பதி..!

12ஆம் வகுப்பு மாணவர்களின் நலனுக்காகவே 11ஆம் பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் அன்பில் மகேஷ்

மெட்டாவுடன் தமிழக அரசு முக்கிய ஒப்பந்தம்: இனி வாட்ஸ்-ஆப் மூலமே அரசு சேவை..!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்.. புளித்துப் போன நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம்! அன்புமணி

பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. வரவேற்று பேசிய நயினார் நாகேந்திரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments