Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாளம்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து…4 இந்தியர்கள் பலி

நேபாளம்: பள்ளத்தாக்கில் கார்  கவிழ்ந்து விபத்து…4 இந்தியர்கள் பலி
Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (18:06 IST)
நேபாள நாட்டிற்கு பயணம்  செய்த இந்தியர்களின் கார் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில், 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

பீகார் மாநிலத்தின் இருந்து 5 பேர் காரில் நேபாளத்தின் காத்மண்டுக்குச் சென்றனர். இவர்கள் சென்ற கார், இன்று அதிகாலையில், நேபாள நாட்டில் மஹ்மதி மாகாணத்தின் சிந்த்ஹூலி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது., கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து,  கார் 500 மீட்டர் பள்ளத்திக் விழுந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து, தகவலறிந்த மீட்புக்குழுவினர், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இவ்விபத்தில் உயிரிழந்த 4 பேரில் உடல்களை மீட்ப ராணுவத்தினர் உதவி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்ட யுஜிசி.. மாணவர்கள் ஜாக்கிரதை..!

இவ்வளவு பணம் கொடுக்கிறோம்.. எங்களுக்கு என்ன கொடுக்குறீங்க? என்ற வாதமே தப்பு: நிர்மலா சீதாராமன்

சுனிதா வில்லியம்ஸ்க்கு சொந்த பணத்தில் சம்பளம்.. ட்ரம்ப் அறிவிப்பு..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments