Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

Siva
திங்கள், 19 மே 2025 (07:50 IST)
பாகிஸ்தானுக்கு நிதி வழங்க IMF ஒப்புக்கொண்டாலும், தற்போது இந்தியாவின் அழுத்தம் காரணமாக 11 நிபந்தனைகளை விதித்திருப்பதாகவும், இந்த நிபந்தனைகளை பின்பற்றினாலே அடுத்த கட்ட நிதி விடுவிக்கப்படும் என்றும் கூறியுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நிதி வேண்டுமானால், பொதுமக்களுக்கு பல்வேறு விதமான வரிகளை விதிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு IMF அழுத்தம் கொடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
மேலும், IMF தரும் எந்த நிதியும் கணக்கில் வராத வகையில் செலவு செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி, ஒவ்வொரு நிதியும் செலவிடும் போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மின்சார கட்டணத்தில் அதிக வட்டி செலவுக்கான கூடுதல் கட்டணங்களை பொதுமக்கள் செலுத்தும் வகையில் பாகிஸ்தானுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், IMF கொடுக்கும் நிதியில் இந்தியாவுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், இந்தியா–பாகிஸ்தான் இடையே அழுத்தம் அதிகரிக்கும் வகையில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தினால் நிதி வழங்குதலில் பாதிப்பு ஏற்படும் என்றும் IMF தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments