Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவர் சுட்டு கொலை.. இந்தியாவில் பல குண்டுவெடிப்பில் தொடர்பு..!

Siva
திங்கள், 19 மே 2025 (07:40 IST)
2006ஆம் ஆண்டு நாக்பூர் நகரில் உள்ள RSS தலைமையகம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணி வகித்ததாகக் கூறப்படும் லஷ்கர்-இ-தொய்பா உறுப்பினர் ரசுல்லா நிசாமானி காலித்,, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 
தீவிரவாத நடவடிக்கைகளில் முக்கிய பாத்திரம் வகித்த இந்த காலித், 2000ஆம் ஆண்டு நேபாளத்தில் இருந்து லஷ்கரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தியவர்.  பல பெயர்களால் பரவலாக செயல்பட்டுள்ள இவர் இந்தியா மற்றும் நேபாள எல்லை வழியாக பயங்கரவாதிகளை நகர்த்தும் பணியில் இருந்தவர்.
 
நேற்று  சிந்து மாகாணத்தின் பட்னி பகுதியில் வெகு நேரம் காத்திருந்த தாக்குதலாளர்கள், அவர் காரில் வெளியே வந்தபோது துப்பாக்கியால் தாக்கினர். படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
 
RSS தாக்குதல் மட்டுமன்றி, 2005 ஆம் ஆண்டு பெங்களூரு IISc கல்லூரி தாக்குதல், 2008ஆம் ஆண்டு உ.பி.யில் உள்ள ராம்பூர் CRPF முகாமில் நடந்த தாக்குதலும் இவரது செயல்திட்டத்தில்தான் நடைபெற்றன.
 
பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் மற்றும் ஜமாத் இயக்கங்களின் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், நிதி திரட்டல் போன்ற பணிகளுக்கும் காலித் முக்கிய பொறுப்பேற்று செயல்பட்டிருந்தார்.
 
இந்திய புலனாய்வுத்துறை நீண்டகாலமாக தேடி வந்த இந்த பயங்கரவாதியின்  கொலை, பலரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

கூரியர் கொடுப்பது போல வந்து இளம்பெண் வன்கொடுமை! - அதிர்ச்சி சம்பவம்!

சாக்கடையில் இருந்த நாய்க்குட்டியை மீட்ட கபடி வீரர்.. காப்பாற்றியவரையே நாய் கடித்ததால் பரிதாப பலி..!

மேகாலயா தேனிலவு கொலையை பார்த்து கணவரை கொலை செய்த பெண்.. கள்ளக்காதலர் தலைமறைவு..!

உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட்: துரைமுருகன் புகழாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments