Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போன வாரம் ஒரே ஒருவர், இந்த வாரம் 8 லட்சம் பேர்: வடகொரியாவில் கொரோனா பாதிப்பு!

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (18:20 IST)
வட கொரியாவில் கடந்த வாரம் ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்றும் அந்த ஒருவரும் பலியாகி விட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த வாரம் வடகொரியாவில் மொத்தம் எட்டு லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சர்வாதிகாரியாக வட கொரியாவில் ஆட்சி நடத்திவரும் கிம்ஜ்ச்ச்ன், அந்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகுக்கு தெரியாமல் வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு என வடகொரியா அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது 3 நாட்களில் மட்டும் எட்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. வடகொரியா மக்களுக்கு இன்னும் தடுப்பூசி போடாத நிலையில் தடுப்பூசியை அங்குள்ள மக்களுக்கு உடனே போட வேண்டும் என உலக சுகாதார மையம் வலியுறுத்தி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா எப்போது? தேவஸ்தானம் தகவல்..!

புனித தலமா? சுற்றுலா தலமா? திருப்பதி படகு சவாரிக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு..!

நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவ, மாணவிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments