நாடாளுமன்ற தேர்தலின் தற்போதைய வாக்கு எணணிக்கை நிலவரப்படி இந்தியாவின் அடுத்த பிரதமராக பதவி ஏற்கவுள்ள பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்
உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தார்.
நாடெங்கும் ஒன்பது கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
வாக்கு எண்ணிக்கையில் நாடு முழுவதும் பாஜக அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வரலாறு காணாத இந்த வெற்றியை பா.ஜ.கவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
LIVE Tamilnadu Lok Sabha 2014 Election Results
LIVE Lok Sabha 2014 Election Results