நிலாவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நாசா தற்போது நிலவில் 4ஜி சேவையை உருவாக்க திட்டமிட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக நிலவில் ஆய்வுகளை அதிகப்படுத்தி வரும் நாசா மற்ற நாட்டு வானியல் ஆய்வு அமைப்புகளை விடவும் நிலவை சொந்தம் கொண்டாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. முன்னதாக நிலவில் உள்ள கனிமங்களை சேகரித்து வர தனியார் வின்வெளி ஆய்வு நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமான திட்டத்தை அறிவித்தது.
இந்நிலையில் தற்போது நிலவில் 4ஜி அலைவரிசையை ஏற்படுத்துவதற்கான பணிகளில் நாசா ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் விண்வெளி வீரர்கள் நிலவிற்கு செல்லும்போது நல்ல தரத்தில் வீடியோக்கள் எடுத்து பூமிக்கு வேகமாக அனுப்பமுடியும் என கூறப்படுகிறது. நிலவை சுற்று 4ஜி சேவையை நிர்மாணம் செய்வதற்கான ஒப்பந்தத்தை நாசா பிரபல நோக்கியா நிறுவனத்திக்கு வழங்கியுள்ளது.