Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை ஏலியன்ஸிடம் இருந்து பாதுகாக்க முன்வந்த 4ஆம் வகுப்பு மாணவன்

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (18:24 IST)
பூமியை பாதுகாக்கும் அதிகாரி பணிக்கு விண்ணபித்த 4ஆம் வகுப்பு பயிலும் மாணவனுக்கு நாசா பதிலளித்துள்ளது.


 

 
பூமியை வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து பாதுகாக்கும் அதிகாரியை நாசா நியமிக்க உள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் நியூ ஜெர்சியை சேர்ந்த ஜேக் டேவிஸ் என்ற சிறுவன் பூமியை பாதுகாக்கும் அதிகாரி பணிக்கு விண்ணபித்துள்ள சம்பவம் நடைப்பெற்றுள்ளது. இதற்கு நாசா அந்த சிறுவனுக்கு பதிலளித்துள்ளது. அதை நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
 
சிறுவன் விண்ணப்பித்த கடிதத்தில்,
 
என் பெயர் ஜேக் டேவிஸ், என் சகோதரி என்னை ஏலியன் என்று அழைப்பார். பூமியின் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன். எனக்கு வயது வேண்டுமானால் 9 இருக்கலாம் ஆனால், இந்தப் பணிக்கு பொருத்தமாக இருப்பேன் என எழுதி நாசாவிற்கு அனுப்பியுள்ளான்.
 
இதற்கு நாசா எழுதிய பதில் கடிதத்தில், டியர் ஜேக், உன் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள். இந்த பதவி மிகவும் முக்கியமானது. சந்திரன், விண்கற்கள் மற்றும் செவ்வாய் கிரகத்தில் இருந்து சில மாதிரிகள் மீண்டும் கொண்டு வரும்போது, சிறிய நுண்ணுயிரிகளிலிருந்து பூமியைப் பாதுகாப்பது அவசியம். இதற்கு நாங்கள் கைதேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை நியமிக்க உள்ளோம். 
 
நீங்கள் இப்போது தான் பள்ளியில் படித்து வருகிறீர்கள். நன்றாக படியுங்கள். வருங்காலத்தில் ஒரு நாள் கண்டிப்பாக உங்களை நாசாவில் சந்திப்பேன் என நம்புகிறேன் என பதிலளித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments