அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அனுப்பிய விண்கலம் சூரியனை தொட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய், சந்திரன், சனி உள்ளிட்ட பல கிரகங்களுக்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்பி சோதனை மேற்கொண்டு வருகிறது. நாசாவால் அனுப்பப்பட்ட வாயேஜர் விண்கலம் சூரிய குடும்பத்தை தாண்டி இண்டெஸ்டெல்லார் பகுதியை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சூரியனின் மேற்பரப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள விண்கலம் அனுப்பும் முயற்சியில் நாசா தீவிரமாக ஈடுபட்டது. இதற்காக கடந்த 2018ம் ஆண்டு பார்க்கர் என்ற விண்கலத்தை நாசா சூரியனை நோக்கி அனுப்பியது. சூரியனிலிருந்து வெளியாகும் வெப்ப கதிர்வீச்சை தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் நீண்ட காலம் பயணித்து சூரியனை அடைந்துள்ளது.
இதுகுறித்து கூறியுள்ள நாசா விஞ்ஞானிகள் சூரியனின் வெப்ப அடுக்குகளில் மிகவும் நெருக்கமானதும் இதுவரை எந்த விண்கலமும் தொடாததுமான கொரோனா அடுக்கை பார்க்கர் தொட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.