Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாசாவில் உள்ள மறைக்க பட்ட உண்மைகள்

நாசாவில் உள்ள மறைக்க பட்ட உண்மைகள்

நாசாவில் உள்ள மறைக்க பட்ட உண்மைகள்
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (12:32 IST)
சமீபத்தில், தனது சர்வதேச விண்வெளி நிலையத்தின் நேரடி ஒளிபரப்பில் எதோ ஒரு விசித்திரமான பொருள் காட்சியளிக்கவும் நேரலையை நாசா துண்டித்தது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.


 


பின் அது தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட காரியமில்லை என்று நாசா விளக்கமளித்து இருந்தாலும் அதை பெரும்பாலான சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் நம்பவில்லை. நாசாவில் பணிபுரிந்த முன்னாள் விஞ்ஞானிகள் கூட ஏலியன் சார்ந்த உண்மைகள் அமெரிக்க அரசு மற்றும் நாசாவினால் மறைக்கப்படுவதாக தகவல்கள் அளித்துள்ளனர்.

நாசா மறைத்த ஏலியன் சார்ந்த உண்மைகளை, நாசாவின் கேமிராக்கள் சில சமயம் காட்டிக்கொடுத்து விடுகிறது. நாசா கேமராக்களில் மீண்டும் யுஎஃப்ஒ (UFO) எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் பதிவாகியுள்ளது.

வழக்கமாக ஏதாவது ஒரு கேமிராவில் தான் இதுபோன்ற மர்மான பொருட்கள் பதிவாகும். இம்முறை இரண்டு வெவ்வேறு கேமராக்களில் ஒரே நேரத்தில் ஒரே யுஎஃப்ஒ காணப்படுகிறது.
பதிவாகியுள்ள மர்ம பொருள் ஆனது கன வடிவிலான யுஎஃப்ஒ போன்றும், சூரியனுக்கு அருகேயும் அது காணப்படுகிறது முக்கியமாக அது நம் பூமியின் அளவை விட பெரியதாக இருந்துள்ளது.

இஐடி 195 மற்றும் இஐடி 171 என்ற இரண்டு கேமராக்கள் 25 மணி நேரம் இடைவெளியில் எடுத்த புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது அந்த மர்ம பொருள் எந்தவிதமான முரண்பாடும் இல்லாமல் அதே இடத்தில் உள்ளது.

இது சார்ந்த விளக்கத்தில் யுஎஃப்ஒ தேடலாளர்கள் யுஎஃப்ஒ ஆனது சூரியனின் நிற மற்றும் ஒளிமண்டல அடுக்குகளில் இருந்து ஆற்றலை உறிஞ்சுக் கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீயா? நானா? நிகழ்சியில் ரஜினிகாந்த்