Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விண்வெளியில் வலம் வரும் பிரம்மாண்ட காயலான் கடை! – நாசா கண்டுபிடித்த விண்வெளி புதையல்!

Advertiesment
விண்வெளியில் வலம் வரும் பிரம்மாண்ட காயலான் கடை! – நாசா கண்டுபிடித்த விண்வெளி புதையல்!
, செவ்வாய், 29 டிசம்பர் 2020 (11:27 IST)
விண்வெளியில் முழுக்க முழுக்க உலோகத்தால் ஆன ஒரு விண்கல்லை நாசா கண்டறிந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாசாவின் ஹபுல் டெலெஸ்கோப் விண்வெளியில் இருந்தபடி பல்வேறு பால்வழி அண்டங்கள், கோள்கள் மற்றும் எரிநட்சத்திரங்களை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அவ்வாறு கண்டறியப்படும் விண்கற்கள் பெரும்பாலும் இறுக்கமான பாறைகளால் ஆனவையாக இருக்கும். அவற்றில் சில உலோகங்கள் கிடைக்கலாம் என்றாலும் பூமியில் உள்ளபடியே அவற்றில் அதை தோண்டியெடுக்க வேண்டி இருக்கும்.

இந்நிலையில் ஹபுல் டெலஸ்கோப் மூலமாக முழுக்க முழுக்க உலோகத்தால் ஆன விண்கல்லை நாசா கண்டறிந்துள்ளது. முழுக்க இரும்பு மற்றும் நிக்கல் கலவையால் உருவாகியுள்ள இந்த விண்கல் பாறைகள் எதுவுமின்றி முழு உலோகமாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல்லின் பண மதிப்பு பூமியின் தற்போதைய ஒட்டுமொத்த பொருளாதாரமான 150 ட்ரில்லியன் டாலர்களை விட 70,000 மடங்கு மதிப்பு அதிகமானது. இவற்றில் உள்ள இரும்பு, நிக்கலை பிரித்து பூமியில் இரும்பு பொருட்கள் உற்பத்திக்கு பயன்படுத்தினால் அடுத்த பல ஆயிரம் வருடங்களுக்கு பூமியில் இரும்பு தோண்டியெடுக்க தேவையே இருக்காதாம்.

சிக்கெ என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் பூமியிலிருந்து 230 மில்லியன் கிலோமீட்டருக்கு அப்பால் சனி மற்றும் வியாழனுக்கு நடுவே விண்கற்கள் கூட்டத்திடையே சுற்றி வந்து கொண்டுள்ளதாம். இந்த விண்கல்லை ஆராய சிக்கெ விண்கலம் ஒன்றை ஏவி ஆய்வுகள் மேற்கொள்ளவும் நாசா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடி சொன்ன கோவிலில் வழிபாடு; எடப்பாடியாரின் தேர்தல் பயணம்!