Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1,284 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு: நாசா தகவல்

Advertiesment
புது கிரகங்கள்
, வியாழன், 12 மே 2016 (21:26 IST)
சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

 
சூரிய மண்டலத்தைப் போலவே, பல சூரிய மண்டலங்கள் உள்ளன. விண்வெளியில் உள்ள பல சூரியன்களை அவற்றுக்கான கிரகங்கள் சுற்றி வருகின்றன. அவற்றை நாசா அனுப்பிய கெப்ளர் கண்டுபிடித்துள்ளது.
 
இந்நிலையில், சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை இதுவரை கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. அவற்றில் 9 கிரகங்கள் தங்கள் சூரியனில் இருந்து பூமியைப் போலவே சரியான தூரத்தில் சுற்றி வருகின்றன.
அதனால் அங்கு சரியான தட்பவெப்ப நிலை, தண்ணீர் இருப்பதான வாய்ப்புகள் இருப்பதால் உயிர்கள் வாழக்கூடிய சூழல் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து நாசாவின் தலைமை விஞ்ஞானி எலன் ஸ்டாபேன் கூறியதாவது:-
 
இந்த கண்டுபிடிப்பு, நமது பூமியைப் போலவே விண்வெளியில் கிரகங்கள் இருக்கும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது. கெப்ளர் தொலைநோக்கியின் புதிய கிரகங்களின் கண்டுபிடிப்புகள் குறித்து கடந்த ஜூலை 2015-ம் ஆண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அப்போது மொத்தம் 4,302 கிரகங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றில் 1,284 கிரகங்கள்தான் உண்மையில் பெரியதாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவற்றில் 550 கிரகங்கள் பூமியை போலவே அளவு மற்றும் பாறைகள் நிறைந்தவையாக உள்ளன என்று தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் குறித்து அமெரிக்க தமிழர்களின் கருத்து