Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூரியனுக்கு சென்று ஆராய்ச்சி: நாசா இன்று விளக்கம்!!

சூரியனுக்கு சென்று ஆராய்ச்சி: நாசா இன்று விளக்கம்!!
, புதன், 31 மே 2017 (16:52 IST)
அமெரிக்காவின் நாசா மையம் சூரியனில் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. இது குறித்து இன்று விளக்கமளிக்கவுள்ளது என தெரியவந்துள்ளது.


 
 
சூரியனுக்கு செல்ல ‘எஸ்பிபி’ (சோலார் புரோப்பிளஸ்) என்ற விண்கலத்தை உருவாக்கி வருகிறது. அடுத்த ஆண்டு இந்த விண்கலத்தை சூரியனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. 
 
இது சூரியனின் ‘கரோனா’ எனப்படும் மேல்பரப்பை ஆய்வு செய்கிறது. கரோனா சூரியனின் உள்புற பரப்பை விட பல நூறு மடங்கு அதிக வெப்பம் கொண்டது. கிட்டதட்ட 5 லட்சம் டிகிரி செல்சியஸ்.
 
இந்நிலையில் இந்த ஆய்வு குறித்த விளக்கங்களை நாசா இன்று இரவு 8.30 மணிக்கு நாசா டெலிவி‌ஷன் மற்றும் தனது இணையதளத்திலும் ஒளிபரப்புவதாக அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை சில்க்ஸ் தீ விபத்து ; நகைகள் உருகின ; துணிகள் நாசம் : வீடியோ