Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனா தான் எனக்கு முன்மாதிரி: பிரதமர் பதவியை ஏற்க போகும் இம்ரான்கான் பேட்டி

Advertiesment
சீனா தான் எனக்கு முன்மாதிரி: பிரதமர் பதவியை ஏற்க போகும் இம்ரான்கான் பேட்டி
, வியாழன், 26 ஜூலை 2018 (19:19 IST)
பாகிஸ்தானில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி 76 தொகுதிகளில் வெற்றி பெற்றும் 43 இடங்களில் முன்னிலையில் பெற்றும் உள்ளது. ஆட்சி அமைக்க மொத்தம் 137 தொகுதிகள் தேவை என்ற நிலையில் தற்போது 119 தொகுதிகளில் இம்ரான்கான் கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சிறிய கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான்கான் தலைமையில் பாகிஸ்தானில் புதிய அரசு அமையப்போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
 
இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இம்ரான்கான், 'சீனாதான் எனக்கு முன்மாதிரி. நாடாக உள்ளது. சீனாவில் வறுமையின் பிடியில் இருந்த 70 கோடி மக்களை அந்நாட்டு அரசு மீட்டெடுத்துள்ளது. அதேபோல் பாகிஸ்தானிலும் வறுமையில் உள்ளவர்களை மீட்பதுதான் முதல் வேலை. 
 
webdunia
நான் அரசியலுக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகின்றது. பாகிஸ்தானின் ஏற்ற இறக்கங்களை பார்த்து வந்துள்ளேன். 22 ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னர் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த அல்லாவிற்கு நன்றி. நான் கனவு கண்ட பாகிஸ்தானை உருவாக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த அரசு நபிகள் ஆட்சி காலத்தில் இருந்ததை போன்றதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் பதவி விலக வேண்டுமா... கமல் கூறுவது என்ன?