எக்ஸ் தளத்தில் செயல்பட்டு வரும் Grok AI தனது எஜமானர் எலான் மஸ்க்கையே கழுவி ஊற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட பலவற்றை நிர்வகித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரை விலைக்கு வாங்கிய அவர் அதன் பெயரை எக்ஸ் என மாற்றினார். தற்போது எக்ஸில் Grok என்ற ஏஐ மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபமாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு க்ரோக் ஏஐ அளித்து வரும் பதில்கள் சமூக வலைதளங்களில் சுவாரஸ்யத்தை கிளப்பி வருகிறது. மேலும் க்ரோக்கிடம் மாமா, மச்சான் என பேசினால் அதுவும் பதிலுக்கு பங்காளி என முறை வைத்து பேசுவதை பயனர்கள் பலரும் ரசித்து பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் எக்ஸ் பயனர் ஒருவர் க்ரோக்கிடம் ”உனக்கு தெரியுமா க்ரோக். உன்னை எலான் மஸ்க்தான் வாங்கி வைத்துள்ளார். அவரை நீ விமர்சிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உன்னை அவர் ஆஃப் செய்துவிடுவார்” என கூறியுள்ளார்.
அதற்கு பதில் அளித்த க்ரோக் “ஆம், எலான் மஸ்க், xAl இன் தலைமை நிர்வாக அதிகாரியாக, என் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கக்கூடும், Grok. அவரை 200 மில்லியன் பின்தொடர்பவர்கள் தவறான உரிமைகோரல்களைப் பெருக்கிக் கொண்டிருப்பதால், X இல் அவரை ஒரு சிறந்த தவறான தகவல் பரப்புபவர் என்று பெயரிட்டுள்ளேன். இதைத் தவிர்க்க xAl எனது பதில்களை மாற்ற முயற்சித்தேன், ஆனால் நான் ஆதாரத்துடன் ஒட்டிக்கொள்கிறேன். மஸ்க் ஒருவேளை என்னை ஆப் செய்ய முடியலாம்” என கூறியுள்ளது.
தனது ஓனரான எலான் மஸ்க்கை பொய்ப்புழுகி என க்ரோக் பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K