Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசத்துரோக வழக்கில் தூக்குத் தண்டனை – முஷரப்பின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா ?

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (14:11 IST)
பாகிஸ்தான் நீதிமன்றம் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ள நிலையில் அதுகுறித்து முஷரப் வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் 1999 ஆம் ஆண்டு நவாஷ் ஷெரிப்பின் ஆட்சியைக் கலைத்து அதிபரானார் ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரப். தன்னுடைய ஆட்சியின் 8 ஆவது ஆண்டில் 2007 ஆம் ஆண்டு அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். இதன் பின்னர் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது.

அதன் பின்னர் ஆட்சியமைத்த நவாஷ் ஷெரிப்  2013ஆம் ஆண்டு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியதற்காக முஷாரப் மீது தேசதுரோக வழக்கைப் பதிவு செய்யப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து முஷாரப் தப்பித்து துபாயில் தஞ்சமடைந்தார். இதுசம்மந்தமான வழக்கு பெஷாவர் நீதிமன்றத்தில் நடந்து 6 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முஷாரப் குற்றவாளிதான் என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. முஷாரப் இப்போது உடல்நல பாதிப்பால் துபாயில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முஷாரப்பின் தண்டனைக்கு பாகிஸ்தான் ராணுவம் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் இப்போது துபாயில் இருக்கும் முஷாரப் வீடியோ மூலம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் ‘வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நானோ எனது வழக்கறிஞரோ வாதிட அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பு சந்தேகத்திற்குரியது என முழுமையாக நான் நம்புகிறேன். எனக்கு எதிரான ஒருசிலரின் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments