Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் – தேச துரோக வழக்கில் தூக்குத் தண்டனை !

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் – தேச துரோக வழக்கில் தூக்குத் தண்டனை !
, செவ்வாய், 17 டிசம்பர் 2019 (13:26 IST)
தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் 1999 ஆம் ஆண்டு நவாஷ் ஷெரிப்பின் ஆட்சியைக் கலைத்து அதிபரானார் ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரப். தன்னுடைய ஆட்சியின் 8 ஆவது ஆண்டில் 2007 ஆம் ஆண்டு அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். இதன் பின்னர் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது.

அதன் பின்னர் ஆட்சியமைத்த நவாஷ் ஷெரிப்  2013ஆம் ஆண்டு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியதற்காக முஷாரப் மீது தேசதுரோக வழக்கைப் பதிவு செய்யப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து முஷாரப் தப்பித்து துபாயில் தஞ்சமடைந்தார். இதுசம்மந்தமான வழக்கு பெஷாவர் நீதிமன்றத்தில் நடந்து 6 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முஷாரப் குற்றவாளிதான் என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. முஷாரப் இப்போது உடல்நல பாதிப்பால் துபாயில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

24X7 மனி டிரான்ஸாக்‌ஷன்; 8 மணி நேரத்தில் NEFT-க்கு அமோக வரவேற்பு!!!