Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாய்ப்பால் கொடுக்கையில் தாய், குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Advertiesment
Mother
, வெள்ளி, 29 மார்ச் 2019 (13:25 IST)
பிறந்த குழந்தைக்கு ஆறுமாதம் வரை தாய் தாய்ப்பால் கொடுப்பது வழக்கம். அதன் பின்னர் பால், சத்துள்ள கூழான உணவுகளை குழந்தைக்குத் தருவர்.
அயர்ந்லாந்தில் வசித்து வந்த மேரி என்ற பெண்னுக்கு அண்மையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  அக்குழந்தை பிறந்த சில தினங்களிலேயே டாரக் என்று பெயர் வைத்து அழைத்தனர்.
 
பிஞ்சுக் குழந்தை டாரக்கிற்கு அன்னை மேரி தாய்ப்பால் கொடுத்துள்ளார். ஆனால்  வழக்கத்திற்கு மாறாக டாரக்கிற்கு தாய்ப்பால் கொடுக்கும் போது மேரிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. 
 
அதனால் தன் கையில் இருந்த குழந்தையை அவர் கீழே போட்டதுடன், அக்குழந்தை மீதே அவர் விழுந்துவிட்டார். 
 
சத்தம் கேட்டு விரைந்து வந்த மருத்துவர்கள், குழந்தையை மீட்டனர். குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்கையில்  பலனளிக்காமல் உயிர் பிரிந்தது.  கீழே விழுந்த மேரியும்  பலியானார். 
 
இதை அறிந்த மேரியின் கணவர் மற்றும் அவரது இரு மகன்கள் மிகுந்த வேதனையடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணமேடையில் வாந்தி எடுத்த மணப்பெண்!!! ஆடிப்போன மணமகன்... கிளைமாக்சில் நடந்த சுவாரஸ்யம்....