Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொசுவை விரட்டும் டிவி விற்பனைக்கு வருகிறது

Advertiesment
கொசுவை விரட்டும் டிவி விற்பனைக்கு வருகிறது
, வெள்ளி, 17 ஜூன் 2016 (20:23 IST)
மலேரியா, டெங்கு, ஜிகா போன்ற கொடிய நோய்களை உண்டாக்கும் கொசுக்களை விரட்டும் சக்தி கொண்ட அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த தொலைக்காட்சி பெட்டியை தென் கொரியா நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துளது.


 

 
கொசுக்கள் மூலம் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏராளமான நோய்கள் வருகிறது. டெங்கு, மலேரியா, ஜிகா போன்ற கொடிய நோய்களும் கொசு கடிப்பதாலேயே உண்டாகிறது. இந்த நோய்களால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மரணம் அடைகிறார்கள்.
 
இந்நிலையில், கொசுவை விரட்டும் தொலைக்காட்சி தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த டிவி இயங்கும் போதும், அணைத்த வைத்திருக்கும் போதும் இயங்கும். இந்த டிவி தென் கொரியா நாட்டின் தலைநகரான சியோலில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ.26,500 முதல் ரூ.47,500 வரை நீள்கிறது. 
 
இது போன்ற தொழில்நுட்பம் ஏற்கனவே ஏசி  மற்றும் வாஷிங் மிஷன் ஆகியவற்றில் நடைமுறையில் உள்ளது. தற்போது தொலைக்காட்சிகளிலும் இந்த தொழில்நுட்பம் புகுத்தப்பட்டிருக்கிறது.
 
விரைவில் இந்த கொசுக்களை விரட்டும் தொலைக்காட்சிகள் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாயமான மாணவன் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு : கரூர் அருகே பரபரப்பு