Publish Date: Fri, 25 Mar 2016 (16:11 IST)
Updated Date: Fri, 25 Mar 2016 (16:20 IST)
சந்திரனில் மனிதர்கள் குடியேறுவது இன்னும் ஏழாண்டுகளில் சாத்தியமாகும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சந்திரனில் மனிதர்களை குடியேற்றுவதற்கான முயற்சி பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துவருகின்றது.
அடுத்த ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் சந்திரனில் மனிதர்கள் வசிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விஞ்ஞானிகள் நெம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் சுமார் 10 பேர் வரை தங்கக்கூடிய வகையில் சந்திரனில் தளம்அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு 10 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில்ரூ.66,915 கோடி) வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் செவ்வாய் கிரகத்தில் தளம் அமைப்பது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.