குரங்கு அம்மை: எல்லாவித நெருக்கமான தொடர்புகளால் பரவும்!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (10:25 IST)
குரங்கு அம்மை நோய் உடல் உறவுகள் உட்பட எல்லாவித நெருக்கமான தொடர்புகள் வழியாகவும் பரவக்கூடியதாம்.

 
ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த நோய் அறிகுறி கண்டறியப்பட்டாலும், தற்போது ஆப்பிரிக்க தொடர்பு இல்லாமலே பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோயால் 16,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசர நிலை என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் குரங்கு அம்மை நோய் தொற்று உலகமே எதிர்பார்க்காத வேகத்தில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பையும் தாண்டி குரங்கு அம்மை தொற்று அதி வேகத்தில் பரவி வருகிறது.

இதனைத்தொடர்ந்து அதிர்ச்சிகரமான செய்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், குரங்கு அம்மை நோய் உடல் உறவுகள் உட்பட எல்லாவித நெருக்கமான தொடர்புகள் வழியாகவும் பரவக்கூடியதாம். துணிகள், படுக்கைகள், மின்னணு பொருட்கள் மூலமாகவும் குரங்கு அம்மை பரவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி.. பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து..!

"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னையில் வெறும் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ, பேருந்து டிக்கெட் ! யார் யார் பயன்படுத்தலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments