தமிழ் நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை தொற்று இல்லை என தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
உலகம் முழுவதும் தற்போது மிக வேகமாக குரங்கு அம்மை நோய் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்த நிலையில் கேரளாவில் 3 பேருக்கும் டெல்லியில் ஒருவருக்கும் குரங்கு அம்மை நோய் பரவியுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை யாரும் யாருக்கும் குரங்கு அம்மை தொற்று இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
இருப்பினும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்