வட இந்தியாவில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை அடுத்து இந்திய மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த வாழ்த்தில், ஹோலி பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் மகிழ்ச்சியுடன் இந்தத் திருவிழாவைக் கொண்டாடும் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் புதிய வீரியத்தையும் ஆற்றலையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
அதேபோல் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்தியாவில் ஹோலிப் பண்டிகையை கொண்டாடுவதை அடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் எனது இனிய ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள். நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் மீது வீசப்படும் செழிப்பான வண்ண பொடிகள் கொண்ட ஹோலி மிகவும் பிரபலமானது. மகிழ்ச்சி நிறைந்த இந்த ஹோலி நேர்மறை எண்ணங்களை அதிகமாக்கி, வேறுபாடுகளை ஒதுக்கி வைக்கும். இந்த கடினமான காலங்களில் உலகெங்கிலுமுள்ள சமூகங்கள் கொண்டாடப்பட வேண்டிய தினம் என்று குறிப்பிட்டுள்ளார்,