Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முறையாக செல்போனில் இண்டர்நெட்; மகிழ்ச்சியில் கியூபா

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (15:19 IST)
கியூபா நாட்டில் முதல் முறையாக செல்போனில் இணையதளம் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

 
50 ஆண்டு கால இணைய வரலாற்றில் கியூபாவில் முதன் முறையாக செல்போனில் இன்டர்நெட் பயன் படுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவில் கண் மூடி தூங்கும் வரை எப்போதும் 4ஜி வேகத்தில் செல்போனில் இன்டர் நெட் பார்க்கும் இந்தியர்களுக்கு இது ஆச்சரியமான வி‌ஷயமாக இருக்கலாம்.
 
பல்வேறு துறைகளில் கியூபா முன்னேற்றங்களை கண்டிருக்கும் கியூபா இப்போதுதான் முழு இணைய சேவை வசதியை பெற உள்ளது. அமெரிக்காவை விட பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்த கியூபா சோவியத் ரஷியா உடைந்த பின் பெரிய பாதிப்பை சந்தித்தது. 
 
அமெரிக்காவின் கெடுபிடியால் கியூபா இன்னும் பெரிய மாற்றங்களை சந்திக்காமல் உள்ளது. தற்போது கியூபாவில் 2ஜி நெட்வொர்க் மட்டுமே உள்ளது. அந்த நெட்வொர்க்கும் கூட அரசு வழங்கும் பொது வைபை மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்.
 
தொலை தொடர்பு சாதனங்களை விற்க அமெரிக்கா கடும் கட்டுப்பாடு விதித்துள்ள காரணத்தினால் அங்கு உலகின் பெரிய மொபைல் நெட்வொர்க்குகள் எதுவும் கிடையாது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments