Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டாம் உலகப்போரில் மாயமான நீர்மூழ்கி கப்பல் 71 உடல்களுடன் மீட்பு

இரண்டாம் உலகப்போரில் மாயமான நீர்மூழ்கி கப்பல் 71 உடல்களுடன் மீட்பு
, வெள்ளி, 27 மே 2016 (18:29 IST)
இரண்டாம் உலகப்போரின் போது திடீரென மாயமான ஒரு நீர்மூழ்கி கப்பல் 73 வருடங்களுக்குப் பிறகு தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த கப்பலில் இருந்த 71 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.


 

 
1942ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் உக்கிரமாக இருந்த போது, இத்தாலி நாட்டை சேர்ந்த கப்பல்களை தாக்கி அழிக்கும் நோக்கத்துடன் சென்ற இந்த நீர்மூழ்கி கப்பல், லா மடேலானாவில் உள்ள துறைமுகத்தில் நங்கூரம் போட்டு நிறுத்தப்பட்டு இருந்தது.
 
அந்த கப்பல் டிசம்பர் 31ஆம் தேதி கடைசியாக சிக்னல் அனுப்பியது. அதன் பின் அந்த கப்பலில் இருந்து சிக்னல் பெறப்படவில்லை. மாயமான அந்த கப்பல் நீரில் மூழ்கியிருக்கலாம் என ராணுவ அதிகாரிகள் கருதினர்.
 
இந்நிலையில், 73 ஆண்டுகளுக்கு பிறகு, சார்டினியா கடலின் வடகிழக்கு பகுதியில் உள்ள தாவோல்வாரா எனும் தீவில் சுமார் 100 மீட்டர் ஆழத்தில், டைவிங் குழுவினர் இந்த நீர்மூழ்கி கப்பலை கண்டறிந்துள்ளனர்.  அந்த கப்பலில் 71 உடல்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் கடல் சிப்பந்திகளாக இருக்கலாம் எனவும், ஆக்சிஜன்  தட்டுப்பாடு ஏற்பட்டு மூச்சுத்திணறி அவர்கள் இறந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 3 பேரின் முதலமைச்சர் கனவு தகர்ந்துவிட்டது - இளங்கோவன் கிண்டல்