Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லைன்னா..! பெண் அமைச்சரை வன்கொடுமை செய்த கும்பல்!

Brittanica Lauga

Prasanth Karthick

, திங்கள், 6 மே 2024 (09:24 IST)
ஆஸ்திரேலியாவில் வாக்கிங் சென்றுக் கொண்டிருந்த பெண் அமைச்சரை கடத்தி மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பல நாடுகளிலும் சாதாரண மக்களுக்கு எதிராக குற்றச்சம்பவங்கள் நடைபெறும்போது அவர்களை பாதுகாக்கவும், குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் ஆட்சியாளர்கள், காவல்துறை உள்ளது. ஆனால் அப்படி ஆட்சி செய்பவர்களே குற்றம் செய்பவர்களால் பாதிக்கப்படுவது எளிய மக்களுக்கே பாதுகாப்பு குறித்த பயத்தை ஏற்படுத்திவிடும். அப்படியான சம்பவம் ஒன்று ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள எப்பூன் தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட 37 வயது பெண்மணி பிரிட்டானி லாவ்கா. இவர் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சுகாதாரத்துறை துணை அமைச்சராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் தனது வீட்டின் அருகே சாலையில் பிரிட்டானி லாவ்கா வாக்கிங் சென்றுள்ளார்.


அப்போது அவரை பிடித்து தாக்கிய மர்ம கும்பல் அவருக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து லாவ்கா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த மேலும் சில பெண்கள் லாவ்காவை தொடர்பு கொண்டு தங்களுக்கும் இதுபோன்ற வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறியதாக லாவ்காவே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன. பெண் அமைச்சரே மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீட் கிடைக்காத அதிருப்தி. மீண்டும் அதிமுகவுக்கு செல்கிறாரா திருநாவுக்கரசர்?