Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

9 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்லாந்தில் ராணுவ ஆட்சிக்கு முடிவு….

Thailand
, செவ்வாய், 16 மே 2023 (22:59 IST)
தாய்லாந்து நாட்டில் மன்னர் ஆட்சி மற்றும் ராணுவ ஆட்சிக்கு தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற நிலையில்,  9 ஆண்டுகளுக்குப் பின் ராணுவ ஆட்சிக்கு முடிவுக்கு வந்துள்ளது.

தாய்லாந்து  நாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதுடன், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனநாயக ஆட்சியைக் கலைத்தது.

அப்போது முதல் முன்னாள் ராணுவ தளபதி பிரயுத்சான் ஈசா பிரதமராக பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், ராணுவ ஆட்சி மற்றும் மன்னர் முறைக்கு எதிராக இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதனால், தாய்லாந்தில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில், ராணுவ ஆதரவு பெற்ற கட்சிக்கும், எதிர்க்கட்சிகளாக பார்வர்ட் கட்சியான பியூதாய் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி காணப்பட்டது.

இதன் முடிவில், வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில், எதிர்க்கட்சிகள்( பியூ தாய் 141 இடங்கள், மூவ் பார்வர்ட் கட்சி 11 இடங்கள்) வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

எனவே, 9 ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வரவுள்ளது. மேலும், அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும்  தேர்தல் ஜூலையில் நடைபெறவுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷச்சாராயம் விற்றவருக்கே நிவாரணம் அறிவித்த அரசு - அண்ணாமலை டுவீட்