Publish Date: Thu, 11 May 2023 (15:10 IST)
Updated Date: Thu, 11 May 2023 (15:13 IST)
இந்த ஆண்டு சம்பள உயர்வு இல்லை என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளதையடுத்து அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என்று மைக்ரோசாப்ட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நிதிநிலை சிக்கலான நிலையில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் இந்த முடிவுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று நம்புவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு இல்லை என்றாலும் போனஸ், பங்கு ஒதுக்குதல், பணி உயர்வு போன்றவை இருக்கும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அறிக்கை இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva