மெக்சிகோவில் நகர மேயர் ஒருவர் முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டில் உள்ள சான் பெத்ரோ ஹுவாமெலுலா நகரத்தின் மேயராக இருந்து வருபவர் ஹியூகோ சாசா. சான் பெத்ரோவில் பழங்குடி மக்கள் பலரும் வசித்து வரும் நிலையில் அவர்களிடையே சில நம்பிக்கைகள் உள்ளது.
அப்பகுதியின் இயற்கையையும், மழை வளத்தையும் காக்க ஆண்டுதோறும் அப்பகுதியின் மேயராக இருப்பவர் இளம் முதலை ஒன்றை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையின்படி தற்போது அப்பகுதி மேயராக இருந்து வரும் ஹியூகோ சாசா 7வயது இளம் முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டார்.
கிறிஸ்தவ முறைப்படி நடந்த இந்த திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவர் அந்த முதலைக்கு முத்தமிட்டார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.