விண்வெளியில் கோடிக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இது போன்ற விண்கல் ஒன்று பூமியை நோக்கி அதிக வேகத்தில் வருவதாகவும், நாளை பூமியை கடந்து செல்லும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளியில் சுற்றும் விண்கற்கள் சில சமயங்களில் பூமியின் புவி ஈர்ப்பு பாதைக்குள் நுழைந்து விடுகின்றன. அப்போது ஈர்ப்பு விசை காரணமாக அந்த கற்கள் நேரடியாக பூமியில் வந்து விழுந்தால் ஆபத்து ஏற்படும்.
ஆனால், இந்த கற்கள் பூமியின் ஈர்ப்பு விசைக்குள் நுழையும் போது தீப்பிடித்து, பூமிக்கு வருவதற்கு முன்பாகவே எரிந்து சாம்பலாகிவிடும். இந்நிலையில் பூமியை நோக்கி 40 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று வந்து கொண்டிருக்கிறது.
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மேலும் ஒரு விண்கல் பூமியை கடந்து செல்லவிருக்கிறது. 2018 சிபி என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு பூமியை கடக்கும். இது பூமியிலிருந்து வெறும் 64 ஆயிரம் கிலோ மீட்டர் தூர இடைவெளியில் கடந்து செல்லவுள்ளது.