Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

Advertiesment
நிலநடுக்கம்

Siva

, வெள்ளி, 28 மார்ச் 2025 (16:57 IST)
மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக தாய்லாந்து தலைநகரமான பாங்காக்கில் 30 மாடி கட்டடம் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது. அதில் சிக்கியிருந்த 43 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
 
இன்று மதியம்  மியான்மர் நாட்டின் சாகெய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ தொலைவில், 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் அடியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலிருந்து 12 நிமிடங்கள் கழித்து, சாகெய்ங் நகரின் தெற்கே 18 கி.மீ தொலைவில் 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
இந்த நிலநடுக்கங்களால் மியான்மரில் பல்வேறு இடங்களில் சாலைகள் உடைந்து பள்ளம் ஏற்பட்டு, கட்டடங்கள் தகர்ந்து விழுந்துள்ளன. குறிப்பாக, டௌங்கோ நகரில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நிலநடுக்கத்தால்  ரயில், மெட்ரோ போன்ற போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், நகரின் வடக்குப் பகுதியில் அரசின் 30 மாடி அலுவலகக் கட்டடம் சில நொடிகளில் தரைமட்டமாகியது. அதில் சிக்கியிருந்த 43 பேரின் நிலைமையைப் பற்றிய தகவல் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. 
 
இந்த சூழ்நிலையில் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவால் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா