Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

செவ்வாய் கிரகத்தில் புற்றுநோய் கதிர்வீச்சு; நாசா தகவல்

Advertiesment
செவ்வாய் கிரகம்
, சனி, 10 ஜூன் 2017 (19:00 IST)
செவ்வாய் கிரகத்தில் புற்றுநோய் உருவாக்கக்கூடிய கதிர்வீச்சுகள் அதிக அளவில் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


 

 
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்காக சூழல் உள்ளதா என வெகு காலமாக நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளனர். அதன்படி செவ்வாய் கிரகம் குறித்து அதிக அளவில் தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது. அவ்வப்போது நாசா செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறது.
 
கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் சோதனை செய்து அவ்வப்போது தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. தற்போது கியூரியாசிட்டி மூலம் செவ்வாய் கிரகத்தில் பூமியை விட 1000 மடங்கு கதிர்வீச்சு அதிகமாக இருப்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கதிவீச்சுகள் புற்றுநோய் உருவாக்கும் தன்மையுடையது என தெரிவித்துள்ளனர்.
 
விண்வெளிக்கு சென்ற வீரர்களின் உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜி.எஸ்.டி. வரியால் சலுகைகளை வாரிவழங்கும் அமேசான், ஃபிளிப்கார்ட்