Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுவர்களின் காமத்தை தூண்டி உடலுறவு கொண்ட திருமணமான பெண்!

சிறுவர்களின் காமத்தை தூண்டி உடலுறவு கொண்ட திருமணமான பெண்!

Advertiesment
சிறுவர்களின் காமத்தை தூண்டி உடலுறவு கொண்ட திருமணமான பெண்!
, வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (13:33 IST)
அமெரிக்காவில் ப்ரூக் லஜினெஸ் என்ற 38 வயதான இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் சிறுவர்களின் காமத்தை தூண்டி அவர்களுடன் உடலுறவு கொண்ட குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.


 
 
மிச்சிகன் மாகாணத்தில் உள்ள லிமா டவுன்ஷிப் என்ற இடத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார் ப்ரூக் லஜினெஸ் என்ற 38 வயதான பெண். இவர் கடந்த ஆண்டு ஸ்னாப் சாட் என்ற சமூக வலைதளத்தில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களை சந்தித்துள்ளார்.
 
அந்த சிறுவர்களுக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வைத்து அவர்களுடன் ஆபாசமாக பேசி வந்துள்ளார் அந்த பெண். பின்னர் அந்த சிறுவர்களை சந்திக்க விரும்புவதாக கூறி அவர்களின் வீடுகளில் இரவு நேரங்களில் சென்று தங்கியுள்ளார்.

webdunia

 
 
அப்போது அந்த 14 மற்றும் 15 வயதான சிறுவர்களின் காம உணர்வை தூண்டி அவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார் இந்த 38 வயதான இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண். இந்த விவகாரம் 14 வயதான சிறுவனின் தாய்க்கு தெரியவர அவர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.
 
இந்த வழக்கில் அந்த 38 வயதான ப்ரூக் லஜினெஸ் மீதான அனைத்து குற்றங்களும் கடந்த ஜூன் மாதம் நிரூபிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வயது குறைந்த சிறுவர்களுடன் உடலுறவில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என்பதால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரேமண்ட்ஸ் நிறுவருக்கு நேர்ந்த அவல நிலை!!