Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரியுபோலில் 2 கட்டிடங்களில் 100 இறந்த உடல்கள்! – உலக நாடுகள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (10:15 IST)
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 100 நாட்களுக்கும் மேலாக போர் நடத்தி வரும் நிலையில் மரியுபோல் நகரில் 100 பொதுமக்களின் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 100 நாட்களை தாண்டிவிட்டது. உலக நாடுகளின் எதிர்ப்பு மற்றும் பொருளாதார தடைகளையும் மீறி ரஷ்யா இந்த போரை தொடர்ந்து நடத்தி வருகிறது. போரை நிறுத்த உலக நாடுகள் பலவும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

போர் தொடங்கியது முதல் இதுவரை உக்ரைன் மீது ரஷ்யா 2,100 ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் 600 ஏவுகணைகள் அண்டை நாடான பெலாரஸில் இருந்து ஏவப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக ரஷ்யா உக்ரைனின் மரியுபோலில் தீவிரமாக போர் தொடர்ந்தது.

ஏவுகணை தாக்குதலால் பல கட்டிடங்கள் உருகுலைந்தன. அங்குள்ள இடிந்த குடியிருப்பு கட்டிடங்களில் இருந்து சுமார் 100க்கும் அதிகமான பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு.. அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா பயணம்!

அன்புமணிக்கு நான் என்ன குறை வெச்சேன்! - கலங்கி பேசிய ராமதாஸ்!

அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை.. டிரம்புக்கு செக் வைத்த மோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments