Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்வாண குளியல் போட்டவருக்கு நேர்ந்த கதி : ஆணுறுப்பில் சிக்கிய மீன் தூண்டில்

நிர்வாண குளியல் போட்டவருக்கு நேர்ந்த கதி

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2016 (13:44 IST)
ஏரியில் ஜாலியாக நிர்வாண குளியல் போட சென்றவரின் ஆணுறுப்பில் மீன் தூண்டில் சிக்கிய சம்பவம் ஜெர்மனியில் நடந்துள்ளது.


 

 
ஜெர்மனியில் உள்ள பாவரியன் ஏரியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிர்வாண குளியலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு பல ஆண்கள் நிர்வாண குளியல் போடுவது வழக்கம்.
 
அப்படி ஒருவர் சமீபத்தில் அங்கு சென்று ஹாயாக நிர்வாண குளியலில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது ஆண் உறுப்பில் ஏதோ சிக்கியது போல் உணர்ந்த அவர், அது என்னவென்று பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.
 
காரணம், மீன் பிடிப்பதற்காக வீசப்படும் தூண்டில் அவரது உறுப்பில் மாட்டியிருந்தது. சுற்றிப் பார்த்த போது, அங்கு ஒருவர் தூண்டிலுடன் நின்று கொண்டிருந்தார். தூண்டிலை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. எனவே தூண்டில் போட்டவரை நோக்கி நீந்தி, கரைக்கு சென்று தூண்டிலை எடுக்க முயன்றுள்ளார். அப்போதும் முடியவில்லை. இதனால் அந்த மீனவர் தூண்டிலின் ஒரு பகுதியில் கட்டப்பட்டிருந்த இழையை துண்டித்தார்.
 
அதன்பின், தனது சைக்கிளில் ஏற்றி அவரது வீட்டில் விட்டார். உடனடியாக தனது காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார் அந்த நபர். அவரது உறுப்பிலிருந்து மீன் தூண்டிலை அகற்றிய மருத்துவர்கள் ஒரு வாரத்திற்கு நீச்சல் மட்டுமல்ல குளிக்கவே கூடாது என்று கூறிவிட்டார்களாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

கேதார்நாத் கோவில் நடை திறப்பது எப்போது? முன்பதிவு தேதி அறிவிப்பு..!

பழங்கள் மற்றும் உணவு கழிவுகளில் கான்கிரீட்.. ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்பு.!

ஜேஇஇ 2-ம் கட்ட தேர்வு: விண்ணப்பங்களை திருத்தம் செய்வது எப்போது?

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்திற்கு அனைத்து கட்சியை கூட்டுங்கள்: அன்புமணி

அடுத்த கட்டுரையில்