Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் : மயிர் இழையில் உயிர் தப்பிய டிரம்ப் (வீடியோ)

துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் : மயிர் இழையில் உயிர் தப்பிய டிரம்ப் (வீடியோ)

Advertiesment
America
, ஞாயிறு, 6 நவம்பர் 2016 (11:26 IST)
அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப்பை கொலை செய்யும் நோக்கத்தில், துப்பாக்கியுடன் வந்த மர்ம நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


 

 
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வருகிற 8ம் தேதி அங்கு நடக்கவுள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும்(68), குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்பும்(68) களத்தில் உள்ளனர். 
 
எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை அங்கு பலத்த போட்டி நிலவுகிறது. டிரம்ப், ஹிலாரி இருவரும் கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
 
இந்நிலையில், நெவடா மாநிலம் ரெனோ நகரில் நடைபெற்ற, ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று இரவு டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, கையில் துப்பாகியுடன் கூட்டத்தில் நின்றிருந்த ஒரு மர்ம நபர், டிரம்ப் மீது தாக்குதல் நடத்த பாய்ந்தார். உடனே சுதாரித்த டிரம்பின் பாதுகாவலர்கள், டிரம்ப்பை பத்திரமாக மேடைக்கு பின்னால் அழைத்துச் சென்றனர்.
 
இதனிடையில், அங்கிருந்த போலீசார் அந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர்.  டிரம்ப்பை கொலை செய்யும் நோக்கத்தில் அந்த மர்ம நபர் அங்கு வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அவரிடம் போலீசார் விசாரணை செய்து  வருகிறார்கள். 
 
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், தன்னை பாதுகாத்த பாதுகாவலர்களுக்கு நன்றி கூறிவிட்டு, மீண்டும் தனது பேச்சை தொடங்கினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவிற்கு வீட்டு சாப்பாடு; நடக்க பயிற்சி : விரைவில் வீடு திரும்புவார்?