Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிச்சயிக்கப்பட்ட பெண் திருமணம் செய்துகொள்ள மறுப்பு- தன்னைதானே திருமணம் செய்துகொண்ட நபர்!

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (10:17 IST)
பிரேசில் நாட்டில் தன்னைத் தானே ஒரு மணமகன் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பஹியாவைச் சேர்ந்த 33 வயது  டியோகோ ரபெலோ என்பவருக்கும் விட்டர் புவெனோ என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணப்பெண் திருமண நிச்சயதார்த்ததை முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். இதை மணமகனிடமும் அறிவித்துள்ளார்.

இதைக் கேட்ட டியாகோ ஒரு வித்தியாசமான முடிவை எடுத்துள்ளார். அதன்படி தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ள அவர் முடிவு செய்துள்ளார். நிகழ்வு கடந்த மாதம் பஹியாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றுள்ளது. இதில் டியாகோவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் இப்போது வைரலாகி வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

அடுத்த கட்டுரையில்