Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடித்த மதுவுக்கு பணம் இல்லாததால் ஆடைகளை கொடுத்துவிட்டு நிர்வாணமாக சென்ற வாலிபர்

Advertiesment
குடித்த மதுவுக்கு பணம் இல்லாததால் ஆடைகளை கொடுத்துவிட்டு நிர்வாணமாக சென்ற வாலிபர்
, புதன், 27 ஜூலை 2016 (12:12 IST)
குடித்த மதுவுக்கு பணம் இல்லாததால்  தனது ஆடைகளை கொடுத்துவிட்டு நிர்வாணமாக சென்ற வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


 

ஐரோப்பாவில் உள்ள செக் குடியரசுவைச் சேர்ந்த பிரெரோவ் நகரைச் சேர்ந்த ஒருவர் கடந்த திங்கள்கிழமை அன்று அருகிலிருந்த மதுபாருக்கு சென்று இஷ்டம்போல மதுவை குடித்துள்ளார். பின்னர் பில் தொலையை கொடுக்க முயன்றபோதுதான் தெரிந்தது தான் பணத்தை வீட்டில் மறந்துவிட்டு வந்ததை.

இது குறித்து பார் ஊழியரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதனை ஏற்காத ஊழியர், பணத்தை கொடுத்துவிட்டு போ...அல்லது உனது ஆடைகளை கழற்றி வைத்துவிட்டு பின் பணத்தை கொடுத்துவிட்டு வாங்கி செல் என்றாராம்.

இதனால் வேறு வழியின்றி தனது ஆடைகளை கழற்றி கொடுத்துவிட்டு நிர்வாணமாக வெளியே சென்றாரார். இதனை அந்த சாலை வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.ஆனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அந்த இளைஞர் அருகிலிருந்த பாரில் மது அருந்திக் கொண்டிருந்த தனது நண்பரிடம் பணம் பெற்று அதனை பாரில் கொடுத்து தனது ஆடைகளை பெற்றுள்ளார்.

இந்த காட்சிகள் பாரின் அருகில் உள்ளா சாலையில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபாச வலைத்தளம் நடத்திய கணவன் மனைவி கைது