மனைவி மற்றும் மகன்களின் அழுகிய பிணத்தோடு வசித்த மனிதன் – விலகாத மர்மம் !

வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (09:02 IST)
கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருடன் ஆண்டனி

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் தனது குடும்பத்தினரைக் கொலை செய்துவிட்டு அவர்களின் பிணத்தோடு வாழ்ந்துள்ளார் ஆண்டனி எனும் மனிதர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகானத்தைச் சேர்ந்தவர் ஆண்டனி. இவருக்கு  மேகன் என்ற மனைவியும் அலெக்ஸ், டைலர் மற்றும் ஜோ என்ற மூன்று மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ஆண்டனியின் சகோதரி அவரது வீட்டுக்கு சென்றபோது ஆண்டனி மட்டுமே இருந்துள்ளார். அவரது குடும்பத்தினர் பற்றி கேட்டதற்கு சந்தேகம் அளிக்கும் விதமாக பதில் அளித்துள்ளார். இதனால் அவர் போலீஸில் சென்று புகார் கொடுக்க அந்த பகுதிக்கு சென்று போலிஸார் ஆண்டனி வீட்டின் அருகில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.

சந்தேகத்தின் பேரில் ஆண்டனியின் வீட்டை உடைத்துச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் விதமாக ஆண்டனி தனது மகன்கள் மற்றும் மனைவியின் அழுகிய சடலங்களோடு இருந்துள்ளார். ஆண்டனியைக் கைது செய்த போலிஸார் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் ஆண்டனியிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

ஆண்டனி ஏன் அவர்களைக் கொலைச் செய்தார் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சடலங்களின் நிலையை வைத்துப் பார்க்கும் போது கொலைகள் இரு வாரங்களுக்கு முன்னர் செய்யப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம் திமுகவினர் கவலை