ஃபேஸ்புக்கில் அடிமையாக உள்ள பலர் தாங்கள் போடும் பதிவிற்கு லைக் வராவிட்டால் டென்ஷன் ஆகிவிடுவதை பார்த்திருக்கின்றோம். ஆனால் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் தான் போட்ட பதிவிற்கு 1000 லைக்ஸ் வரவில்லை எனில் ஐந்து மாத குழந்தையை 15வது மாடியில் இருந்து கிழே போட்டு கொன்றுவிடுவேன் என்று மிரட்டி ஒரு பதிவு போட்டுள்ளார்.
அல்ஜீரியா நாட்டிடில் அடுக்கு மாடிக் குடியிருப்பின் 15-ஆவது மாடியில் தங்கியிருக்கும் ஒருவர் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை பதிவு செய்துவிட்டு பின்னர் தனது பதிவிற்கு 1000 லைக்ஸ் வரவில்லை என்றால் குழந்தை கொன்றுவிடுவேன் என்று பதிவு செய்ததோடு ஜன்னல் வழியாக ஒரு குழந்தையை தூக்கிப்பிடித்தபடியான போட்டோவையும் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவால் அதிர்ச்சி அடைந்த பலர் அவரது பதிவிற்கு லைக் போட்டனர். இந்நிலையில் இதுகுறித்து தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்த அல்ஜீரியா போலீசார் மிரட்டிய நபரை கைது செய்தனர். அவர் மீது குழந்தையின் பாதுகாப்புக்கு பாதிப்பு உண்டாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.